தியாகராஜநகரில் 17ம் தேதி ராதா கல்யாண மஹோத்ஸவம்
ADDED :4614 days ago
திருநெல்வேலி: பாளை., தியாகராஜநகரில் ராதா கல்யாண மஹோத்ஸவம் வரும் 17ம் தேதி நடக்கிறது. பாளை., தியாகராஜநகர் 14வது தெற்கு தெரு ஆஸ்திக சமாஜத்தில் ராதா கல்யாணத்தை முன்னிட்டு நாளை (16ம் தேதி) மாலை 4 மணிக்கு அஷ்டபதி பஜனை, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், திவ்யநாம தீபபிரதட்சணம் நடக்கிறது. 17ம் தேதி காலை 7 மணிக்கு உஞ்சவிருத்தி, காலை 9 மணிக்கு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவமும், பஜனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது. கல்யாணத்தை தியாகராஜநகர் நடராஜ பாகவதர் குழுவினர் நடத்துகின்றனர்.
நெல்லை ஜங்ஷன் நெல்லை ஜங்ஷன் வீரராகவபுரம் காலனியில் 17ம் தேதி ராதா கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது. முன்னதாக திவ்யநாமம், அஷ்டபதி பஜனை, உஞ்சவிருத்தி, ராதா கல்யாணம், ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது.