குன்னத்தூர் சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் விழா
ADDED :4675 days ago
திருநெல்வேலி: குன்னத்தூர் சங்கரமகாலிங்க ஈஸ்வரர் (செந்தூரலிங்கம்) கோயிலில் துர்கா அபிராமி திருவாசகம் முற்றோதுதல் குழு சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு 36 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மகேஸ்வர பூஜைக்கான ஏற்பாடுகளை பாலகிருஷ்ணன், நவராஜ் செய்திருந்தனர். சிவனடியார்கள் நாகராஜன், லெட்சுமி, மீனா, முருகேசன், ராமர், ஆனந்தம் அம்மாள் கவுரவிக்கப்பட்டனர். இதில் சண்முகம், நாகராஜ், ராமன், ராஜீவ்காந்தி, வண்டிமலைச்சி, ராஜன், செண்பகம், பேச்சியம்மாள், வீரா, சண்முகராஜா, மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவாசகம் முற்றோதுதல் குழு செயலாளர் கணேசன், சொக்கலிங்கம், அர்ச்சகர் சங்கர் நடத்தினர்.