மத நல்லிணக்க சந்தனக்கூடு
ADDED :4614 days ago
மேலக்கால்: சோழவந்தான் மேலக்கால் கணவாய் சையது வருசை இப்ராகிம் ஒலியுல்லா தர்காவில், மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடந்தது.டிரஸ்ட் நிர்வாகிகள் கணவாய்பிச்சை, நாகூர்மீரான், ஆஸாத்நாகூர்மீரான், சேட்பஷீர், சிராஜீதீன் பால்,சந்தனம் கலந்த குடங்களை சுமந்து செல்ல, பக்கீர்கள் புனிதகுரான் வேதம் பாடிக்கொண்டு ஊர்வலமாக அய்யனார், கருப்பச்சாமி கோயிலிலும், மேலக்கால் காளியம்மன் கோயிலில் பூஜை செய்து, திரும்பி தர்காவில் முடிவுற்றது. அங்கு, அனைத்து மதத்தினரும் பங்கேற்ற "உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வராஜ், துணைதலைவர் ஒச்சு, முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.