கொண்டத்துக் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது.திருப்பூர் அடுத்துள்ள பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 20ம் தேதி மாலை 6.00 மணிக்கு முதல்கால யாக வேள்வியுடன் துவங்குகிறது. 21ம் தேதி காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, இரவு 9.00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல். 22ம் தேதி காலை 7.00 மணிக்கு பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமையில் கும்பாபிஷேகம், 8.00 மணிக்கு அன்னதானம், மாலை 6.00 மணிக்கு அம்மன் வீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக நான்கு இடங்களில் தற்காலிக டேங்க் அமைத்து குடிநீர் வசதி, ஏழு இடங்களில் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலை, அன்னதான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மீது 12 இடங்களில் மோட்டார் மூலம் தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி டி.எஸ்.பி., தலைமையில் பெருமாநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.