உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்னாசியர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

இன்னாசியர் ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

விருதுநகர்: விருதுநகர் தூய இன்னாசியர் ஆலயத்தில் நேற்று சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் தூய இன்னாசியர் ஆலயத்தில் பாதிரியார் எஸ். ஞானபிரகாச அடிகளார் தலைமையில், இயேசு கிறிஸ்துவின் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு திருப்பலி, மறையுரையும் நடந்தது. இயேசுவை வழிபடும் நோக்கில், கடந்த 13ல் தொடங்கிய சாம்பல் தினத்துடன், 40 நாள் தவக்காலம் தொடங்கியது. இதை தொடர்ந்து, வெள்ளி கிழமை சிலுவைப்பாதை வழிபாடும் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !