ஒரே குழுவாக 4200 பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரை
ADDED :4674 days ago
வடமதுரை: அய்யலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளை ஏராளமான பக்தர்கள், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். காப்பு கட்டி விரதமிருந்த 4,200 பக்தர்கள், பாதயாத்திரை குழு குருசாமி பிச்சை தலைமையில் அய்யலூர் களர்பட்டியில் ஒன்று கூடினர்.விநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், கருப்பண்ணசாமி, ராமபிரான் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர்.அய்யலூர் அன்னை மாரியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட, பக்தர்கள் பாதயாத்திரையாக சமயபுரத்திற்கு புறப்பட்டனர். அனைவரும் வரும் ஞாயிறு அன்று சமயபுரம் கோயிலில் வழிப்பட்டு, நேர்த்திக்கடன் முடித்து ஊர் திரும்புகின்றனர்.