சக்கரத்தாழ்வார் கோவில் சம்ப்ரோக்ஷணம்
ADDED :4615 days ago
திண்டிவனம்: தீவனூர் சக்கரத்தாழ்வார் கோவில் சம்ப்ரோக்ஷணம் நேற்று காலை நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயணப் பெருமாள் என்கிற லக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோவிலின் வெளி பிரகாரத்தில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு நேற்று மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 9.15 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.பூஜைகளை கோபுராபுரம் பத்தங்கி ஜகன்நாதன் , கோவில் அர்ச்சகர் ராமானுஜதாசர் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஸ்தபதி சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.