வங்கனூர் கோவில் கும்பாபிஷேகம்
வங்கனூர்: வங்கனூர், சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வங்கனூர் சுப்பிரமணியசாமி கோவில், 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்த சீரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. கடந்த புதன்கிழமை யாகசாலை பூஜை துவங்கியது. 108 கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.நேற்று காலை, 7.30 மணிக்கு, கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.காலை, 10 மணிக்கு மூலவர் சுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானை, வினாயகர், பழனியõண்டவர் ஆகியோருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இரவு வாணவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. ஏகாம்பரகுப்பம் ஏகாம்பர குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.காலை, 7.30 மணிக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது, ஐதீக முறைப்படி விமான கோபுரம், மூலவர் சன்னிதி மற்றும் பரிவார தேவதை சன்னிதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏகாம்பரகுப்பத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு சுவாமி வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.இதேபோல், சித்தூர் மாவட்டம், புத்தூர் சீலக்கார தெருவில் சித்தி வினாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலில் புதிதாக பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்காதேவி, நவகிரகங்கள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.சாலவான்குப்பம்சாலவான்குப்பம் செல்வவினாயகர், தனியமர்ந்தம்மன், படவேட்டம்மன் கோவில்களில், நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.பட்டிபுலம் ஊராட்சிக்குட்பட்ட சாலவான்குப்பத்தில் செல்வவினாயகர் கோவில், புலிக்குகை வளாகத்தில் தனியமர்ந்தம்மன் கோவில், பக்கிங்காம் கால்வாய்க் கரையில் படவேட்டம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இக்கோவில்களில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை, மூன்று கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.