கன்னிகாபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேத்தியாத்தோப்பு புதுத் தெருவில் 50 லட்சம் ரூபாய் செலவில் ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயில் கட்டப்பட்டது. விநாயகர், முருகன், நாகர், துர்கை, தன்வந்திரி, தட்சணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்கள் சன்னதிகளுடன் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 13ம் தேதி அதிகாலை காலை 5:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி வழி பாடு நடந்தது. 6:00 மணிக்கு கடைவீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் வழிபாடு நடந்தது.தொடர்ந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், யாத்ரா தானமும் நடந்தது. காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடும், உடன் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை குருமூர்த்தி சிவாச்சாரியார், பாலாஜிஅய்யர், கீர்த்திவாச குருக்கள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர். பேரூராட்சி சேர்மன் இளஞ்செழியன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சிட்டிபாபு, ஒன்றிய துணைச் சேர்மன் சிவப்பிரகாசம் உட்பட ஏராள மான பக்தர்கள் பங்கேற்றனர். ஆரிய வைசிய மகா சபா, மகிளா சபா, வாசவி கிளப் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.