உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவிலில் செடல் மற்றும் தேர் திருவிழா

முத்தாலம்மன் கோவிலில் செடல் மற்றும் தேர் திருவிழா

கடலூர்: கடலூர் முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி நேற்று சுவாமி தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடலூர், திருப்பாதிரிப்புலியூரில், அக்கிள் நாயுடு தெரு எதிரில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் 90ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 6ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. மறுநாள் 7ம் தேதி மாலை 5:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது. ஒன்பதாம் நாளான நேற்று செடல் திருவிழாவையொட்டி காலை 9:00 மணிக்கு சக்தி கரகம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு வேண்டுதல் கொண்ட பக்தர்கள் செடல் போட்டுக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் உற்சவர், அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !