உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமாரியம்மன் கோவில் 5,004 தீபஜோதி விழா

பெரியமாரியம்மன் கோவில் 5,004 தீபஜோதி விழா

ஈரோடு: ஈரோடு, பிரப் ரோடு, பெரியமாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கத்தினர், 5,004 தீபஜோதி விழா நடத்தினர். முன்னதாக, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்து, நிலமீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் தலைமையில், 5,004 பெண்கள், தீப ஜோதியை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.பாதுகாப்பு காரணமாக ஊர்வல வழித்தடத்தை, போலீஸார் மாற்றி அமைத்தனர். கோட்டையில் துவங்கிய ஊர்வலம், திருவேங்கடசாமி ரோடு வழியாக, பி.எஸ்.பார்க், பிரப் ரோடு வழியாக பெரிய மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக டவுன் டி.எஸ்.பி., பெரியய்யா தலைமையில், தாலுகா, சத்திரம், சூரம்பட்டி, கருங்கல்பாளையம், போலீஸார், 150க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சவீதா சிக்னல், மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோட்டில் இருந்து பிரப் ரோடு வழியாக வந்த வாகனங்கள், எம்.ஜி.ஆர்., சிலை ரவுண்டானா வழியாக திருப்பிவிடப்பட்டது. சென்னிமலை ரோடு, கரூர் ரோடு வழியாக வந்த வாகனங்களும், காளைமாட்டு சிலையில் தடுத்து, ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை வழியாக திருப்பிவிடப்பட்டது.ஊர்வலத்தின் முடிவில், பெரிய மாரியம்மன் கோவிலில், திட்டக்குழு தலைவர் பூசப்பன் தலைமையில் தீப ஜோதி விழா நடந்தது. பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கத்தலைவர் சிவநேசன், கவுன்சிலர் ராதாமணிபாரதி மற்றும் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !