விஸ்வ இந்து பரிஷத் ஆன்மிக பயிற்சி முகாம்!
ADDED :4615 days ago
திருவேடகம்: திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஆன்மிக பயிற்சி முகாம் நடந்தது.சத்சங்க அமைப்பாளர் பரமசிவம் தலைமை வகித்தார். விவேகானந்தர் பேரவை நிர்வாகி தாண்டவன் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் பரமானந்தமகராஜ் துவக்கினார். வி.எச்.பி., மாநில தலைவர் ஆளவந்தார் பேசினார். ராமகிருஷ்ணா ஆசிரம நிர்வாகி நியமானந்தர் மகராஜ் பேசுகையில், ""இந்தியா சுதந்திரம் பெற விவேகானந்தரின் தூய சிந்தனைகளே காரணம். அறியாமையை அகற்றி இந்து கலாசார வரலாறுகள் தலைத்தோங்க ஆன்மிக வழியினை இன்றைய இளைஞர்கள் சமூதாயம் பின்பற்ற வேண்டும், என்றார். வி.எச்.பி., மாநில செயலாளர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம் உட்பட பலர் பேசினர். மாவட்ட செயலாளர் சிவராம் நன்றி கூறினார்.