கைலாசநாதர் கோவிலில் ரத சப்தமி திருவிழா
ADDED :4616 days ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று ரத சப்தமி திருவிழா நடந்தது. அதனையொட்டி காலை 6 மணிக்கு கைலாசநாதர் வீதி உலாவாக சென்று கெடில நதிக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பகல் ஒரு மணிக்கு கோவிலில் 108 சங்கு ஸ்தாபனம் செய்து சிறப்பு ஹோமம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு 108 சங்கு அபிஷேகம், மகா அபிஷேகமும் நடந்தது. மாலை 6 மணிக்கு காமாட்சி அம்மனுக்கும், கைலாசநாதருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9 மணிக்கு விநாயகர், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், தனி காமாட்சி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சுவாமிநாதன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.