முத்துமாரியம்மன் கோவிலில் 27வது அபிஷேக விழா
ஊட்டி: ஊட்டி பிங்கர்போஸ்ட் கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் 27வது ஸம்வத்ஸார அபிஷேக விழா வரும் 22ம் தேதி துவங்குகிறது. வரும் 22ம் தேதி காலை 9:00 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. 23ம் தேதி காலை 8:45 மணி முதல் 1:00 மணி வரை சகல காரிய அனுகூல பரிகார சங்கல்ப மகா அர்ச்சனை, சங்கல்பம், தோஷ நிவர்த்தி, காலை 11:30 மணிக்கு ஊட்டி மட தலைவர் சுவாமி சுகாத்மானந்தா சொற்பொழிவாற்றுகிறார். 24ம் காலை 9:00 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாகனம், கலச ஆவாகனம், ஸ்ரீகட்கமாலா ஹோமம், மாரியம்மன் த்ரிசதி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், அலங்கார மகா தீபாராதனை, பிரசாத விநியோகம், மதியம் 1:30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 26ம் தேதி பகல் 12:00 மணிக்கு பொங்கல் சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருவிழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மானஸ் ஸ்ரீமா கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.