உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உமரிக்காடு கோவில் மாசி கொடை விழா

உமரிக்காடு கோவில் மாசி கொடை விழா

ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள உமரிக்காடு ஒளிக்கோவிலில் மாசி கொடை விழா துவங்கியது. உமரிக்காடு ஒளிக்கோவிலில் 5 நாட்கள் நடைபெறும் விழாவின் துவக்கமாக தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் சங்குமுகத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி கடந்த 14ம்தேதி நடந்தது. பின்னர் யாகபூஜையை தொடர்ந்து பேரொளி பரம்பொருளுக்கு பொங்கலிட்டு படையல் பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும், சென்னை மற்றும் மும்பையில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினசரி 14 கால பூஜைகள் நடக்கிறது. அணிகோர்த்தான் சுவாமி, பகவதி அம்மன், வராகி அம்மன், அருணாச்சல சுவாமி, பூர்வீகசக்தி, இலங்கேஸ்வரி மற்றும் 100 தேவதைகளுக்கு சிறப்பு படையல் பூஜை நடக்கிறது. 3வது நாள் விழாவான சுவாமி மஞ்சள் நீராடுதல், பூக்குழி இறங்குதல் ஆகியவை நடந்தது. தினசரி ராஜமேளம், உருமி மேளம் மற்றும் கணியான் போற்றிப்பாடுதல் நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னை தொழிலதிபர் கார்த்தீசன், சிங்கராஜ், யோகராஜ், ஆறுமுகநேரி பார்த்திபன், சிவசங்கர், ஜெயக்குமார், சிறுதொண்டநல்லூர் தொழிலதிபர் கணேசன், ஸ்பிக் நகர் ரவிச்சந்திரன் உள்பட பலர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !