உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலாபுரம் ஆலய நூற்றாண்டு விழா: 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

திருமலாபுரம் ஆலய நூற்றாண்டு விழா: 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

சேர்ந்தமரம்: திருமலாபுரம் திருமலைநாத புனித லூர்து அன்னை ஆலய நூற்றாண்டு விழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் பங்கு திருமலாபுரம் மலைஉச்சியில் திருமுலைநாத புனித லூர்து அன்னையின் கோயில் கடந்த 1913ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆலய நூற்றாண்டு விழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு நடக்கும் கொடியேற்றத்தை தொடர்ந்து, திருப்பலி நடக்கிறது. வரும் 23ம் தேதி மாலை சேர்ந்தமரம் புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் இருந்து திருத்தலம் நோக்கிய பயணத்தை தொடர்ந்து, மலை உச்சியில் நூற்றாண்டு விழா திருப்பலி பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் நடக்கிறது. இரவு 11 மணிக்கு புனித லூர்து அன்னை தேர்பவனி நடக்கிறது. பங்குதந்தை அந்தோணி வியாகப்பன் அடிகளார் வரவேற்கிறார். பங்குதந்தை ஜோவர்க்கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை எம்பி., ராமசுப்பு, மின்னல்கொடி ராமசுப்பு, முன்னாள் எம்பி., பீட்டர் அல்போன்ஸ், யூனியன் சேர்மன் முருகையா, முன்னாள் சேர்மன் காமராஜ் மற்றும் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பங்குதந்தையர்கள், மறைமாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை பங்குதந்தைகள் அந்தோணிவியாகப்பன், ஜோவர்க்கீஸ் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !