லெட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் தேர்வு பயம் நீங்க யாகம்!
ADDED :4690 days ago
திருநெல்வேலி: நெல்லை சிதம்பர நகர் லெட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் வரும் 24ம் தேதி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடக்கிறது.நெல்லை சங்கர்நகர் செல்லும் வழியில் கொம்பு ஆபீஸ் பஸ்ஸ்டாப் அருகேயுள்ள சிதம்பர நகரில் லெட்சுமி ஹயக்ரீவர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பயம் போக்கவும், தேர்வில் அதிக மார்க் பெறவேண்டியும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு எழுதும் மற்றும் பிற வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்வு முன்னேற்றத்திற்காகவும் லெட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் அபிஷேக ஆராதனை பகல் 12.30 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை அர்ச்சகர் மாதவ பட்டாச்சாரியார் நடத்துகிறார்.