ராமானுஜர் கோவிலில் திருவாதிரை
ADDED :4678 days ago
காஞ்சிபுரம்: ராமானுஜர் கோவிலில், திருவாதிரையையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம், செவிலி மேட்டில் ராமானுஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், திருவாதிரை அன்று, ராமானுஜருக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று காலையில் நடந்த, திருவாதிரையையெட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின் ராமானுஜர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது.