ராமேஸ்வரம் கோயிலில் தயாராகி வரும் மாசி தேர்!
ADDED :4678 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மாசி திருவிழாவிற்காக, 10 லட்ச ரூபாயில் தேர்கள் தயாராகி வருகிறது. ராமேஸ்வரம் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி விழாவில், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம், கோயில் நான்கு ரத வீதிகளில் உலா வரும். இதில், சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர் சேதமடைந்ததால், 10 லட்சம் ரூபாய் செலவில், இரும்பு சக்கரத்துடன் கூடிய 3 புதிய தேர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தேர்களுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மாசி தேரோட்டத்தில், 3 தேர்களும் பளபளப்புடன் பவனி வர உள்ளன.