மழை வேண்டி சிறப்பு தொழுகை
ADDED :4607 days ago
தேனி: கம்பம் பள்ளத்தாக்கில், பருவமழை பொய்த்ததால் இரண்டு போக நெல் சாகுபடியும் பாதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டிலும் மழையில்லை. இதனால் உத்தமபாளையம் முஸ்லிம் ஜமாத் கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. உத்தமபாளையம் கரிசல்களத்தில், நடந்த தொழுகையில் விவசாயிகளும், முஸ்லிம்களும் பங்கேற்றனர். ஜமாத் கமிட்டி தலைவர் தர்வேஸ்மைதீன் தலைமை வகித்தார். பெரியபள்ளிவாசல் இமாம் முகமது சரீப் தொழுகையை நடத்தி வைத்தார்.