உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் தேர்த் திருவிழா

திருக்கோவிலூரில் தேர்த் திருவிழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவில் தேரோட்டம் நடந்தது. கீழையூர் வீரட்டானேஸ் வரர் கோவிலில் கடந்த 16ம் தேதி மாசிமகப் பெருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 8 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் தேர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து 9.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகளுக்கு, பின் பக்தர்களின் நமச்சிவாய கோஷம் முழங்க, ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 3.30 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. இதில் எம்.பி., ஆதிசங்கர், சப்-கலெக்டர் சுபோத்குமார், பேரூராட்சி தலைவர் தேவிமுருகன், கோவில் தக்கார் ஜோதி, தேர் உபயதாரர் சோமசுந்தரம், லோக நாயகி, கவுன்சிலர்கள் சம்பத், ஜெயபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !