உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.28 கோடி!

பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.28 கோடி!

பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.28 கோடியை எட்டியது. பழநி மலைக்கோயிலில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ஒரு கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 175 ரூபாயும், தங்கம் 811 கிராம், வெள்ளி 4 ஆயிரத்து 140 கிராம், அமெரிக்கா, சிங்கப்பூர். மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் கரன்சிகள் 812 ம் இருந்தது. தங்கத்தினால் ஆன வேல், திருமாங்கல்யம், சங்கிலி, மோதிரம், வெள்ளியால் ஆன வேல், கொலுசு, ஆள்ரூபம் காணிக்கையாக செலுத்துப்பட்டிருந்தது. இந்த உண்டியல் வசூல் 20 நாட்களில் கிடைத்தது. உண்டியல் திறப்பின் போது கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் ராஜமாணிக்கம், முதுநிலை கணக்கியல் அதிகாரி ஜெயப்பிரகாசம், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !