கடலூர் துறைமுகத்தில் தெப்பல் உற்சவம்
ADDED :4610 days ago
முதுநகர்: கடலூர் துறைமுக உப்பனாற்றில் மாசி மகத்தையொட்டி தெப்பல் உற்சவம் நடந்தது.மாசி மகத்தையொட்டி கடலூர் துறைமுகம், உப்பனாற்றில் நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. கடலூர் துறைமுகம் மற்றும் தைக்கால் தோணித்துறை பகுதிகளில் நடந்த தெப்பல் உற்சவத்தில் சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், தைக்கால் தோணித்துறை கருப்பு முத்து அம்மன், அக்கரைக்கோரி கண்ணனூர் மாரியம்மன் சுவாமிகள் பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசைப்படகுகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாவித்தனர்.கடலூர் டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.