விநாயகர் கோவிலில் பவுர்ணமி பூஜை
ADDED :4612 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சித்தி புத்தி விநாயகர் கோவிலில், மாசிமக பவுர்ணமி பூஜை நடந்தது.திருக்கழுக்குன்றம் சித்தி புத்தி விநாயகர் கோவிலில், மாசிமக பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு பவுர்ணமி பூஜை நடந்தது. மூலவர் சுந்தர மூர்த்தி விநாயகப் பெருமான் மற்றும் சித்தி, புத்தி தேவியர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.