லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 108 நாள் சஹஸ்ரநாம அர்ச்சனை!
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் திருக்கோவிலில், 108 நாள் சஹஸ்ரநாம அர்ச்சனை விழா நேற்று துவங்கியது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பெருமாளுக்கு 108 நாட்களுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை (லட்சார்ச்சனை) நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும், மேல்படிப்பில் சிறந்து விளங்க வேண்டியும் சஹஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்படுகிறது. இந்தாண்டு, லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை நேற்று துவங்கியது. விழாவில் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிளஸ் 2 தேர்வெழுதவுள்ள மாணவ, மாணவிகள், தேர்வில் பயன்படுத்தவுள்ள பேனாக்களை வைத்து அர்ச்சனை செய்தனர்.
போன்: 0413 226 0096, 94431 04383.