உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருத்தணி: அம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திருத்தணி, மடம் கிராமத்தில் அமைந்துள்ளது படவேட்டம்மன் கோவில். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலை, 7:30 மணிக்கு, 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் அம்மனுக்கு நடத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !