நத்தம் மாசித்திருவிழா: அம்மன் பூப்பல்லக்கில் நகர் வலம்!
ADDED :4710 days ago
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூப்பல்லக்கில் நகர் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் மண்டகப்படி அமைத்து சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டனர்.நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கடந்த பிப் 11 முதல் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோயிலிருந்து வீராக்கோயில் தெரு, பஸ் ஸ்டாண்ட், மீனாட்சிபுரம், அசோக் நகர் பிரிவு, செட்டியார் குளம் தெரு, செந்துறை பிரிவு, வாணிபர் தெரு ஆகிய தெருக்கள் வழியாக பல்லக்கில் நகர் வலம் வந்து கோயில் வந்தடைந்தது.சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டை கோயில் பரம்பரை பூசாரிகள் சொக்கையா, சின்னராஜ், நடராஜ், சுப்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.