உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவதிருப்பதிகளில் ஆந்திர கவர்னர் சுவாமி தரிசனம்!

நவதிருப்பதிகளில் ஆந்திர கவர்னர் சுவாமி தரிசனம்!

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டத்திலுள்ள, நவதிருப்பதிகளில், ஆந்திர கவர்னர் நரசிம்மன், மனைவியுடன், சுவாமி தரிசனம் செய்தார். ஆன்மிக பயணமாக, நெல்லையிலிருந்து, கார் மூலம், காலை 7:30 மணியளவில், நவதிருப்பதிகளில் முதலாவதான, ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் கோயிலுக்கு, நரசிம்மன் வந்தார். அவரை, தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், எஸ்.பி.,ராஜேந்திரன், அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அக்கோயிலில், சுவாமி தரிசனம் செய்த அவர், அடுத்து, நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி(இருகோயில்கள்), பெருங்குளம், பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்தார். மாலையில், தென்திருப்பேரை, திருக்கோளூரில் தரிசித்துவிட்டு, 9வது கோயிலான, ஆழ்வார்திருநகரி ஆதிநாத சுவாமி கோயிலில், தரிசனம் செய்தார். அதையொட்டி, விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !