தென்காசி மந்த மாரியம்மன் கோயிலில் கொடைவிழா துவக்கம்
தென்காசி: தென்காசி மந்த மாரியம்மன் கோயில் கொடைவிழா நாளை (3ம் தேதி) துவங்குகிறது.தென்காசி கீழப்பாளையத்தில் வீற்றிருக்கும் மந்தமாரியம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு 108 சங்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு, அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு கிராமிய கும்மி, கோலாட்டம், பக்தி பாடல், மெல்லிசை கச்சேரி நடைபெறுகிறது. 4ம் தேதி பகல் 12 மணி அபிஷேகம், தீபாராதனை, இரவு 6 மணி அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு 8 மணி ஆன்மிக இன்னிசை கச்சேரி நடக்கிறது. 5ம் தேதி அதிகாலை 5 மணி கணபதி ஹோமம், துர்க்கை ஹோமம், காலை 9 மணி பால்குடம் எடுத்தல், பகல் 12 மணி அபிஷேகம், அன்னதானம் வழங்குதலும் நடைபெறுகிறது. மாலை 4 மணி பொங்கலிடுதல் வைபவமும், 5 மணி வில்லிசை கச்சேரியும், இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்கார, தீபாராதனையும், இரவு 11 மணிக்கு சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வருதல் நடக்கிறது.மேலும் சிற்றாற்றிலிருந்து அம்மனுக்கு சக்திகுடம், தீச்சட்டி எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு அலங்கார பூஜை, தீபாராதனையும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் விழாக்கமிட்டியார் செய்து வருகின்றனர்.