செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :4609 days ago
பவானி: பவானி ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 26ம் தேதி ஸ்ரீமாரியம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 6ம் தேதி பொங்கல் விழா நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை செல்லியாண்டி அம்மன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பின், பெண்களால் சீர் வரிசைகள் கொண்டு வரப்பட்டு, செல்லியாண்டியம்மனுக்கு திருமாங்கல்யம் சாற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. பின் அம்மன் அம்மன் தேரில் அமர்த்தப்பட்டு, திருத்தேர் வீதி உலா புறப்பட்டது. இத்தேர் செல்லியாண்டி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, அகரஹாரம், மேட்டூர் மெயின் ரோடு, தேர் வீதி ஆகிய முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது. ஏராளமானவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.