திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தீர்த்த குளத்தில் தூய்மை பணி
ADDED :4618 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் லட்சுமி தீர்த்த குளத்தை தூய்மைபடுத்தும் பணியில், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.மழை இல்லாததால், குளம் வறண்டு கிடக்கிறது. குளத்தினுள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை ஏராளமாக உள்ளன. அக்குளத்ததை பார்வையிட்ட, கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன், தூய்மை படுத்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இரண்டு நாட்களாக அப்பணி நடக்கிறது.குளத்தில் தண்ணீர் நிரப்பவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.