பாரி வேட்டை விழாவிற்காக அங்காள பரமேஸ்வரி புறப்பாடு
ADDED :4618 days ago
திருப்பரங்குன்றம்: சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு, ஆறுகால பூஜைகள் நடந்தன. மலைமேல் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மலைக்குப்பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.கோயிலில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் நேற்று மாலை புறப்பாடாகி, கீழரதவீதியிலுள்ள குருநாதன் கோயிலில் எழுந்தருளினார். அங்குள்ள மூலவர் அங்காள பரமேஸ்வரி, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. மார்ச் 12ல் பாரிவேட்டை விழா நடக்கிறது.