ஓட்டேரி செல்லப் பிள்ளைராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :2 hours ago
ஓட்டேரி: ஓட்டேரி செல்லப் பிள்ளைராயர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று சிறப்பாக நடைபெற்றது. ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள செல்லப்பிள்ளைராயர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள், கடந்த 29ம் தேதி சங்கல்பத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை கோ பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணியளவில், திருமயிலை பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில், கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் ஸ்ரீ ராமானுஜ எம்பார் சுவாமிகள், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.