உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் கோயிலில் திருக்கல்யாணம்

திருநள்ளார் கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்கால்:திருநள்ளார் நளநாராயணபெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் நளநாராயணபெருமாள் கோயிலின் பிரமோற்ச விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. 5ம்தேதி மாலை யாக சாலை ஹோமம் முடிந்து சூரிய பிரபையில் பெருமாள் வீதி உலா நடந்தது.
6ம்தேதி திருமஞ்சனம் சாற்றுமுறை முடிந்து ஹம்ச வாகனத்தில் நாச்சியார் கோவலத்தில் சாமி வீதி உலா நடைபெற்றுது. 7ம் தேதி சேஷ வாகனத்திலும், 8ம்தேதி கருடசேவையும் நடந்தது. நேற்று முன்தினம் 9ம் தேதி தேர் தீர்த்தவாரி, மாலை 3 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. விழாவில் எம்.எல். ஏ., சிவா,கோயில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !