உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சுவாமி கோயிலில் ரூ.5.67 லட்சம் வசூல்

கந்த சுவாமி கோயிலில் ரூ.5.67 லட்சம் வசூல்

திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில், பழைய செப்பு பித்தளை பொருட்களை ஏலம் விட்டதில், 5.67 லட்சம் ரூபாய் வசூலானது. திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில், கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் இருந்த, பழைய இரும்பு, 3 ஆயிரம் கிலோ, செம்பு, 181 கிலோ, பித்தளை, 1285 கிலோ, எவர்சில்வர், 22 கிலோ, ஈயத்தகடு, 80 கிலோ ஆகியவை, வேலூர் துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) வீரபத்திரன், செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம், 5.67 லட்சம் ரூபாய் வசூலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !