வீரபத்ரசாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா
ADDED :4629 days ago
பேரூர்: வீரபத்ரசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி விழா இன்று நடக்கிறது.இன்று காலை 8.00 மணிக்கு அபிஷேக பூஜையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, 12.00 மணிக்கு அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, இரவு 10.00 மணிக்கு முதல்கால பூஜை நடக்கிறது. தொடர்ந்து, நள்ளிரவு 12.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அதிகாலை 2.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4.00 மணிக்கு, நான்காம் கால பூஜை நடத்தப்பட்டு, 11ம் தேதி காலை 6.00 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. இதையடுத்து, 7.30 மணிக்கு, வீரபத்ரசாமி திருவீதி உலா நடத்தப்பட்டு, பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.