அங்காள பரமேஸ்வரி கோயிலில் மஹா சிவராத்திரி உற்சவ பூஜை
ADDED :4629 days ago
அவிநாசி: அவிநாசி, காந்திபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மஹா சிவராத்திரி உற்சவ சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் ஆகியன நடந்தன.நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், வாஸ்து ஹோமம் ஆகியன நடந்தன. நேற்று காலை ஸ்ரீருத்ர ஜபம், ஸ்ரீருத்ராபிஷேக ஹோமம், வஸோர்த்தாரை மஹா பூர்ணாஹூதி, அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.