கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :4632 days ago
பனைக்குளம்: சாத்தான்குளம் சித்தி விநாயகர், வீரமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மனோகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சித்தி விநாயகர், வீரமுத்து மாரியம்மன் கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சாயல்குடி அருகே கொக்காடியில் சிவலிங்கபெருமாள், பொம்மக்காள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 21 அபிஷேகம் நடந்தது.