தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோயிலில் 3006 விளக்கு பூஜை
ADDED :4593 days ago
திருநெல்வேலி: தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோயிலில் 3006 திருவிளக்கு பூஜை நடந்தது.தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோயிலில் 25 வது ஆண்டாக 3006 திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். விளக்கு பூஜையை முன்னிட்டு சந்திமறித்தம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோயில் முன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை தச்சநல்லூர் ஐயப்ப பக்தர்கள், ஜோதி வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.