ராஜகோபால சுவாமி கோயிலில் நாளை 500வது மகா பஜனை விழா
ADDED :4594 days ago
திருநெல்வேலி: பாளை., அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயில் பக்தர் பேரவை 11ம் ஆண்டு துவக்க விழா, 500வது வார மகா பஜனை விழா, 121வது மாத உழவாரப்பணி நாளை (16“ தேதி) நடக்கிறது.கோபால சுவாமி கோயில் கோபாலன் கலையரங்கில் நாளை மாலை 6 மணிக்கு யதீஸ்வரி சரவணப்பிரியா அம்பா ஆசியுரையும், "நல்வாழ்வு தரும் நாம சங்கீர்த்தனம் என்ற தலைப்பில் யதீஸ்வரி நீலகண்ட பிரியா அம்பா சிறப்புரையும் நடக்கிறது. கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ்.கோட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகிக்கிறார். பஜனையின் நிறைவில் கூட்டு பிரார்த்தனையும் நடக்கிறது. நாளை (17ம் தேதி) 121வது மாத உழவாரப்பணி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஜில்லா பிரசாரக் பாலரமேஷ் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை சுப்பையா, அமைப்பாளர் திருமலைக்குமாரசாமி, பஜனைக்குழு பொறுப்பாளர் சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.