சுடலைமாட சுவாமி கோயிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :4594 days ago
ஆழ்வார்குறிச்சி: கடையம் பாரதிநகர் சீவலபேரியான் சுடலைமாடசுவாமி கோயிலில் இன்று (15ம்தேதி) மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. கடையம் பாரதிநகரில் சீவலபேரியான் சுடலை மாடசுவாமி கோயில் உள்ளது. இங்கு கடந்த பிப்.1ம்தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரண்டாம் தேதியில் இருந்து தினமும் மண்டல பூஜை நடந்தது. இன்று (15ம்தேதி) மண்டல பூஜை நிறைவு விழாவில் காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரத்தில் சீவலபேரியான் சுடலைமாடசுவாமி அருள்புரிகிறாள். ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.