உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. காவடி, பால்குடங்களுடன் பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர். பழநி திருஆவினன்குடி கோயிலில் நாளை காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. வரும் மார்ச் 25ல் திருக்கல்யாணமும், மார்ச் 26- மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது.

பக்தர்கள் வருகை: திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்காவடி, பால்குடங்கள் ஆகியவற்றுடன் பழநிக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஏற்பாடுகளை கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் ராஜமாணிக்கம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !