திவ்யதேச பெருமாள் அலங்கார தரிசனம்
ADDED :4580 days ago
துறையூர்: துறையூரில், இன்று முதல், 24ம் தேதி வரை, 108 திவ்யதேவ பெருமாளுக்கு அலங்கார திவ்ய தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. துறையூர், பாலக்கரையில் உள்ள பிரசன்ன மஹாலில் இன்று காலை, 6 மணிக்கு பாலாஜி அசோசியேட்ஸ் சார்பில், 108 திவ்யதேச பெருமாள் அலங்கார திவ்ய தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீரங்கம், உறையூர், உத்தமர்கோவில், திருவெள்ளறை, ஒப்பிலியப்பன் கோவில், திருச்சேறை, திருக்கோவிலூர், திருப்பாற்கடல், திருவடமதுரை உள்பட, 108 பெருமாள் ஸ்தலங்களை கொண்ட பெருமாள்களை அலங்கார வடிவில், மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, 6 மணி முதல் இரவு, 9 மணி வரை பெருமாள் தரிசனம் காணலாம்.