உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திர திருவிழா 26ம் தேதி உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திர திருவிழா 26ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி: பங்கு உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி கோயில்களுக்கு அதிக அளவில் மக்கள் செல்கின்றனர். இதனால் அன்று (26ம் தேதி) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. அவசர தேவைகளுக்காக கருவூலம் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் ஏப்ரல் மாதம் சனிக் கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !