உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி கோயிலில் வருஷாபிஷேகம்

தென்காசி கோயிலில் வருஷாபிஷேகம்

தென்காசி: தென்காசி தேவிஸ்ரீ பூமாரியம்மன் கோயிலில் இன்று (22ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது. தென்காசி செங்கோட்டைரோட்டில் மருத்துவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட தேவிஸ்ரீ பூமாரியம்மன், பேச்சியம்மன், கருப்பசாமி கோயிலில் இன்று(22ம் தேதி) 12வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. மதியம் அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை சமுதாய தலைவர் செண்பகம், ராஜாமுருகன், நவநீதகிருஷ்ணன், கண்ணன், சேகர், துரை மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !