ஜெருசலேம் செல்ல ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு!
ADDED :4579 days ago
சென்னை : ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்க, இந்த நிதியாண்டில், ஒரு கோடி ரூபாய் நதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் சென்று வர, நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அரசு நிதியுதவி வழங்கும் திட்டம், கடந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு நிதியாண்டுகளுக்கு, 1,000 கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் சென்று வர, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பயணம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டன் நதி, கலிலியோ சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய, புனித தலங்களை உள்ளடக்கியது. இந்த நிலையில், இந்த நிதியாண்டு, ஜெருசலேத்திற்கு புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு, நிதியுதவி அளிப்பதற்காக, 1 கோடி ரூபாய், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.