சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
ADDED :4580 days ago
அவிநாசி: அவிநாசியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது.அவிநாசி, கிழக்கு வீதியில், அரசமரத்து விநாயகர் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. பொங்கல் பூச்சாட்டு விழா, பொட்டுசாமி பொங் கல் வைத்து சாட்டு பூஜையுடன் துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவி லில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் எடுத்து வரப்பட்டு, மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நடந்த அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பெண் கள் பங்கேற்றனர். நேற்று காலை மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைந்தது.