உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதியை மதியால் வெல்வோமே!

விதியை மதியால் வெல்வோமே!

ஒரு பணக்காரர் கார் வாங்கினார். அவருக்கு கார் ஓட்டத்தெரியும் என்றாலும், ஒரு டிரைவரை பணிக்கு வைத்துக் கொண்டார். அனுபவமிக்க அவரால் விபத்து ஏற்படாது என்பது அவரது கணிப்பு. இதுபோல, விதியை மதியால் வெல்ல கற்றுக் கொள்ள வேண்டும். நமது செயல்களுக்கேற்றபடியே விதி அமைகிறது. விதி என்று விட்டுவிட்டால், நமது வாழ்க்கைப் பயணம் நாசமாகி விடும். வாழ்க்கை நல்லவழியில் செல்ல நமது கர்ம
பலனாகிய விதியை புத்தியால் வழிநடத்த வாழ்க்கை சீராகச் செல்லும் என்கிறார்கள் மகான்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !