திருப்பரங்குன்றத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை!
ADDED :4637 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி ஆறாம் திருவிழாவை முன்னிட்டு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் மார்ச் 17ல் துவங்கிய பங்குனித் திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கிறார். ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி, 16கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பல்லக்கில் திருஞான சம்பந்தரும் எழுந்தருளினார். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமய ஸ்தாபித வராற்று லீலைக்காகன பாடல்களை பாடப்பட்டது. தீபாராதனை முடிந்து சுவாமி வீதி உலா நிகழ்ச்சியின்போது மக்களுக்கு அருள் பாலித்தனர்.