உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா, மார்ச் 17ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாளான நேற்று காலை 11.25 மணிக்கு, கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் பட்டர்கள் செண்பகம், பிரமனூர் ராமசாமி திருமணத்தை நடத்தி வைத்தனர். சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில், புஷ்பவனேஸ்வரர் பிரியாவிடையுடன், சவுந்திரநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !